சந்தனாத்தின் அடுத்த படத்தின் வித்யாசமான போஸ்டர் வெளியீடு!

கடந்த சில வருடங்களாக காமெடி வேடத்தை துறந்துவிட்டு தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார் சந்தானம் கிட்டத்தட்ட 5 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்து விட்டார். எந்த படமும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி ஓடவில்லை. இந்நிலையில் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ள டிக்கிலோனா என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தில்தான் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ,ஆனந்தராஜ் மொட்டை, ராஜேந்திரன், யோகிபாபு, முனீஸ்காந்த், அனகா ஆகியோரும் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே