இந்தியாவிலேயே அதிக லைக் பெற்ற மோடியின் ட்விட் – கோல்டன் ட்விட்!

ஆண்டுதோறும் அந்த ஆண்டில் ட்விட்டரில் அதிகம் பரவலாக பேசப்பட்ட மற்றும் பகிரப்பட்ட ட்விட்கள் ஆண்டில் இறுதியில் ட்விட்டர் இந்தியா நிறுவனம் வெளியிடும்.

அதே போன்று இந்த ஆண்டும் தற்போது அந்த பட்டியலை வெளியிட்டுள்ளது ட்விட்டர் இந்தியா.

அதில் தேடப்பட்டு லைக்குகளையும், ரீட்விட்களையும் வாங்கியது பிரதமர் மோடியின் பதிவுகள் தான் எனவும்; அதனால் இந்த ஆண்டிற்கான கோல்டன் ட்விட்டாக, கடந்த மக்களவை தேர்தலுக்கு பின்னர் பிரதமர் மோடி மே 23-ம் தேதி பதிவிட்ட பதிவு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அந்த பதிவில் அனைவரும் இணைந்து செயல்படுவோம்; சேர்ந்து வளம் காண்போம்; வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்; மீண்டும் இந்தியா வென்றுள்ளது என பதிவிட்டிருந்தார்.

அந்த ட்விட் தான் தற்போது கோல்டன் ட்விட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த படியாக சந்திராயன்-2 குறித்த ட்விட்டுகள் இடம் பிடித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே