பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோள் உள்பட 10 செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி.சி. 48 ராக்கெட் திட்டமிட்டபடி இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
பூமியை கண்காணிப்பதற்காக ரீசாட் -2பிஆர்1 என்கிற செயற்கைக்கோளை இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த செயற்கைக்கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது.
இதற்கான கவுண்ட்டவுன் தொடங்கிய நிலையில், இன்று மாலை சரியாக 3.25 மணிக்கு வெற்றிகரமாக ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
ரீசாட் -2பிஆர்1 செயற்கைக்கோளுடன் இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு செயற்கைக்கோள், அமெரிக்காவின் 6 செயற்கைக்கோள்கள் என வணிக ரீதியிலான 9 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளது.