மோடி தாஜ்மஹாலைக் கூட விற்றுவிடுவார் – ராகுல் காந்தி

நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் பிரதமர் மோடி, தாஜ் மகாலையும் விற்று விடுவார் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஜாங்புரா பகுதியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், மேக் இன் இந்தியா குறித்து பேசும் பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தில் ஒரு தொழிற்சாலை கூட அமைக்கவில்லை என சாடினார். 

பிரதமர் மோடிக்கு மதம் குறித்த சரியான புரிதல் இல்லை என விமர்சித்த ராகுல், வன்முறையை தூண்டுவதே பாஜகவின் வேலை எனவும் குற்றம்சாட்டினார்.

நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களை தனியாருக்கு விற்று வரும் பிரதமர் மோடி, உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ் மகாலையும் தனியாருக்கு விற்றுவிடுவார் என ராகுல் காந்தி விமர்சித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே