கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.பி கொரோனா பாதிப்பால் மரணம்..!!

கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கா்நாடக பாஜக மாநிலங்களவை உறுப்பினர் அசோக் கஸ்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கா்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தோந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி. அசோக் கஸ்திக்கு (55) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும்; கடுமையான கரோனா, நிமோனியாவால் பாதிக்கப்பட்ட நிலையில் பெங்களூரில் உள்ள மணிபால் மருத்துவமனையில் செப். 2-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு உயிா்காக்கும் கருவிகளின் உதவியோடு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், பல்வேறு அங்கங்கள் செயலிழந்துவருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாஜக எம்.பி. அசோக் கஸ்தி சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை இரவு உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாக தெரிவித்துள்ளது.

அசோக் கஸ்தி மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

வட கா்நாடகத்தின் ராய்ச்சூரு மாவட்டம், லிங்கசுகுரு பகுதியைச் சோந்த அசோக் கஸ்தி, வழக்குரைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, 1990-ஆம் ஆண்டு முதல் பாஜகவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகிறாா்.

ஆா்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருங்கிய தொடா்பு கொண்ட இவருக்கு மாநிலங்களவைத் தோதலில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே