பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி

மகாத்மா காந்தியின் போதனைகளைப் பரப்புவதில் திரைப்படமும், தொலைக்காட்சித் துறையும் சிறப்பாக பணியாற்றியதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தின கொண்டாட்டம் குறித்து திரைப்பட மற்றும் பொழுதுபோக்கு துறையினருடன் டெல்லியில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இதில் பாலிவுட் நடிகர்கள் அமீர்கான், ஷாருக்கான், சோனம் கபூர், கங்கனா ரணாவத், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி அளப்பரிய படைப்பாற்றலின் சக்தியே நாட்டின் நலனுக்காக பயன்படுத்துவது அவசியம் என்று கூறினார்.

மகாத்மா காந்தியின் போதனைகளை பரப்பும் விவகாரத்தில் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி துறையை சேர்ந்த கலைஞர்கள் சிறப்பாக பணியாற்றி உள்ளதாக பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமீர்கான், மகாத்மா காந்தியின் போதனைகளை பரப்புவதற்கு பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைகளுக்காக பாராட்டுவதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய நடிகர் ஷாருக்கான் இந்தியாவிற்கும் உலகிற்கும் காந்தியை மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என எண்ணுவதாக தெரிவித்தார்.

பின்னர் அமீர்கான் மற்றும் மோடியுடன் ஷாருக்கான் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே