மாமல்லபுரத்தில் சந்திக்கும் மோடி – ஜீ ஜின்பிங் : பயண திட்ட விவரங்கள்

பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் 24 மணி நேரத்தில் நான்கு முறை சந்தித்து பேச உள்ளனர். இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.

சீன அதிபர் ஜீ ஜின்பிங் இரண்டு நாட்கள் பயணமாக வரும் 14-ஆம் தேதி சென்னை வருகிறார்.

வெள்ளிக்கிழமை பகல் 1.30 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வரும் அவர், அங்கிருந்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு செல்கிறார்.

  • ஹோட்டலில் ஓய்வு எடுக்கும் சீன அதிபர் ஜீ ஜின்பிங், மாலை 4.10 மணியளவில் மாமல்லபுரம் புறப்பட்டு செல்கிறார்.
  • அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் மாலை 5 மணியளவில் மாமல்லபுரத்தில் அர்ஜுனன் தபசு பகுதியை பார்வையிடுகின்றனர்.
  • 5.20 மணிக்கு ஐந்துரதம் பகுதிக்கு சென்று சுற்றிப்பார்த்த பின்,
  • 5.40 மணிக்கு கடற்கரை கோவிலுக்கு செல்கின்றனர்.
  • வெள்ளியன்று இரவு 9 மணிக்கு சீன அதிபர் மீண்டும் கிண்டி வந்து ஓட்டலில் தங்குகிறார்.
  • 12ஆம் தேதி காலை 9 மணிக்கு சீன அதிபர் மீண்டும் மாமல்லபுரத்திற்கு செல்கிறார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இரு நாடுகளுக்கு இடையிலான உறவு, வர்த்தக மேம்பாடு, முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

அப்போது சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

பேச்சுவார்த்தைக்கு பின் மதிய உணவை முடித்துக்கொண்டு, பகல் 1.15 மணிக்கு சீன அதிபர் ஜீ ஜின்பிங் மாமல்லபுரத்தில் இருந்து சென்னை வருகிறார்.

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி முடிந்ததும், 2 மணிக்கு சீனா புறப்பட்டு செல்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே