பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பு : பொலிவு பெற்று வரும் மாமல்லபுரம்

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சனிக்கிழமை வருவதையொட்டி மாமல்லபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

அங்குள்ள அனைத்து இடங்களிலும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று, புது பொலிவுடன் காட்சியளிக்கிறது.

பிரதமர் வருகையை ஒட்டி சென்னை, காஞ்சிபுரம், வேலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் இன்றுமுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்தியா மற்றும் சீனா நாட்டு தலைவர்களின் சந்திப்பு காரணமாக மாமல்லபுரத்தில் இறுதி கட்ட ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

வரும் 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை இந்திய பிரதமர் மற்றும் சீன அதிபர் ஆகியோரின் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அண்டை மாவட்டத்திலிருந்து ஏராளமான போலீசார் நேற்று இரவு மாமல்லபுரம் வந்து சேர்ந்தனர்.

வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, 5 ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட பகுதியில் புல்தரைகள் அமைத்தல், சாலை அமைத்தல், நடை பாதை அமைத்தல் அலங்கார மின் விளக்குகள் பொருத்துதல் போன்ற பணிகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால் கற்சிற்பங்கள் மேலும் அழகுமிளிர்ந்து காணப்படுகிறது.

24 மணிநேரமும் போலீசார் அனைத்து வாகனங்களிலும் முழுமையாக சோதனையிட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம், ஸ்ரீபெருபுத்தூர், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவைக்கப்பட்டு ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை, கடற்கரை கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 5 குழுவாக பிரிந்து சோதனை செய்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே