“உலக அரங்கில் தமிழரின் பெருமையை நிலைநாட்டியவர் மோடி”:திண்டுக்கல் சீனிவாசன்

தமிழரின் பெருமையை உலக அரங்கிற்கு எடுத்துச் சொல்லும் பெருமை பிரதமர் மோடியையே சேரும் என தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் அதிமுக மீதான அதிருப்தி குறித்த கேள்விக்கு இடைத்தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளதால் விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மாமல்லபுரம் பல்லவர் ஆட்சிக் கால சிற்பங்கள் பெருமையை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்ற பெருமை பிரதமர் மோடியையே சேர்ந்திடும் என திண்டுக்கல் சீனிவாசன் பெருமிதம் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே