நாட்டின் பொருளாதாரத்தை மோடி சீரழித்து விட்டார்: ராகுல் காந்தி

இந்திய பொருளாதாரத்தை பிரதமர் மோடி சீரழித்து விட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சனம் செய்திருக்கிறார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு அவர் இந்தியாவை பார்த்து உலக நாடுகள் கிண்டல் செய்யும் நிலை ஏற்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.

ஒரு மதத்தினர் மற்றொரு மதத்துடன் சண்டையிடுவதும், ஒரு சாதியினர் மற்றொரு சாதியினருடன் சண்டையிடுவதும் அனைவரின் கேள்விக்கும் ஆளாகி இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதிலேயே பிரதமர் மோடி குறியாக இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

நூறு நாள் வேலைத்திட்டத்தை குறை கூறிய மோடிக்கு பொருளாதாரத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது என்ற ராகுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பார்த்தாவது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள மத்திய அரசு கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே