திமுக தலைவர் முக ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனால், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இதனை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கேரளா முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் உட்பட பல அரசியல் தலைவர்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே