மோடி – சீன அதிபர் சந்திப்புக்குப் பின் வெளியான அறிவிப்பால் பரபரப்பு

சீன பட்டாசுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வோர் மற்றும் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுங்கத் துறை முதன்மை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து சுங்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சீன பட்டாசுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வதோ, விற்பதோ, பயன்படுத்துவதோ சுங்கத்துறை சட்டம் 1962 இன் கீழ் குற்றம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தகவல் தெரிந்தால், பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் மோடி சந்திப்புக்குப் பின்னர் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே