சாதி, மத பாகுபாடின்றி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்யும் தமுமுக குழுவினர்!!!

சென்னையில் கொரோனா பரவல் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை சாதி, மத பாகுபாடின்றி நல்லடக்கம் செய்து வருகின்றனர் தமுமுக குழுவினர்.

மனித இனத்தை அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி வைரஸான கொரோனாவின் பாதிப்பு உலகம் முழுவதும் எல்லாவற்றையும் புரட்டிபோட்டுள்ளது.

அதாவது, இயல்பான நடமாட்டம், போக்குவரத்து, திருமணம் என அனைத்து வழிமுறைகளும்  தற்போது மாறிவிட்டது. அதேபோல மரணமடைந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் முறையும் தற்போது மாறியுள்ளது.

அந்த வகையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை யாரும் அண்டவிடாமல், எவ்வித இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளும் நிகழ்த்தாமல் சமூக இடைவெளியுடன் உடலானது அடக்கம் செய்யப்பட்டு வருகிறது.

எனினும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய உறவினர்களே தயங்கும் நிலையில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் இதுவரை 65 பேரின் உடல்களை மரியாதையுடன் அடக்கம் செய்துள்ளனர்.

மேலும், தமுமுகவினரை போல எஸ்.டி.பி.ஐ., மற்றும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியாவை சேர்ந்த தன்னார்வலர்களும் இச்சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

8 பிரிவுகளாக பிரிந்து செயல்படும் இவர்கள் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்த 41 உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர்.

வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் போது முழுகவச உடை உள்ளிட்ட உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களை இவர்கள் பின்பற்றி வருகின்றனர்.

உடல்களை அடக்கம் செய்யும் சேவையில் சாதி, மத பாகுபாடு பார்ப்பதில்லை என்றும் அந்தந்த மதத்தினரின் மரபுகளை பின்பற்றி வருவதாகவும் தன்னார்வலர்கள் கூறுகின்றனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே