கவுகாத்தி விழாவை ரத்து செய்தார் மோடி!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அசாம் மாநிலத்தில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், கவுகாத்தியில் தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இருப்பினும், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆதரவாகவும் பா.ஜ.க. களத்தில் இறங்கி முயற்சி செய்து வருகிறது.

ஆனால் அந்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஓய்ந்த பாடில்லை. குறிப்பாக, அசாம் மாநிலத்தில் போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் வரும் 10-ம் தேதி இந்திய இளைஞர் விளையாட்டு விழா மற்றும் கண்காட்சி விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதாக இருந்தது.

ஆனால், குடியுரிமை திருத்த சட்டத்தினால் பிரதமர் மோடி போராட்டக்காரர்கள் அதிருப்தியில் இருப்பதால், அவரது இந்தப் பயணம் தற்போது ரத்துசெய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் அசாம் மாநிலத்தில் பிரதமர் மோடி ரத்து செய்யும் 2-வது நிகழ்ச்சி இதுவாகும்.

வரும் 10-ம் தேதி மேற்குவங்கத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் மட்டுமே பிரதமர் மோடி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே