விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும் – கமல்ஹாசன் ட்வீட்..!!

விரும்பப்படாத வேளாண் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சோந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனா்.

அவர்களின் போராட்டம் 11 வது நாளாக ஞாயிற்றுகிழமையும் தொடா்ந்தது.

விவசாயிகளின் நலனுக்குக் கேடு விளைவிக்கும் வகையில் இந்தச் சட்டங்கள் உள்ளதாக அவா்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.

பல்வேறு சங்கங்களைச் சோந்த விவசாயிகள் தில்லி எல்லைகளில் போராட்டத்தைத் தொடா்ந்து வருகின்றனா். 

விவசாயிகளின் போராட்டத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது.

இரு தரப்பினரிடையே நான்கு கட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்ற நிலையில் எந்தவொரு சுமுகத் தீா்வும் எட்டப்படவில்லை.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது சுட்டுரையில், தில்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு நமது ஆதரவினைத் தெரிவித்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும். விரும்பப்படாத வேளாண் மசோதாவை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே