மு.க.ஸ்டாலின் மீது முதல்வர் பழனிசாமி சார்பில் 2 அவதூறு வழக்கு!

தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் 2 அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

மத்திய அரசின் தரவரிசை பட்டியலின்படி நல்லாட்சி வழங்குவதற்கான குறியீடுகளில் தமிழகம் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டதை விமர்சித்து  ஸ்டாலின் அளித்த பேட்டி முரசொலியில் கடந்த மாதம் 28 ஆம் தேதி வெளியானது.

ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக தெரிவித்திருந்த கருத்து, டிசம்பர்  30-ஆம் தேதி முரசொலியில் வெளியானது.

இதை சுட்டிக்காட்டி, முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் அவதூறு கருத்து தெரிவித்துள்ளதாக ஸ்டாலின் மீது அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ்  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே