நிர்பயா நிதியில் பெண்களின் பாதுகாப்புக்காக நவீன இ-கழிவறைகள் – சென்னை மாநகராட்சி

நிர்பயா நிதியில் இருந்து சென்னையில் பெண்களுக்காக 150 இ-டாய்லெட்டுகள் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இ-டாய்லெட் எனும் பெயரில் 150 கழிவறைகளை அமைப்பதற்கான டெண்டரை சென்னை மாநகராட்சி தயார் செய்து உள்ளது.

இவை நகரின் பரப்பான இடங்களில் அமைக்கப்பட உள்ளது எனவும் அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு இரண்டாம் கட்டமாக 27 கோடி ரூபாய் செலவில் 500 கழிவறைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இ-டாய்லெட்டுகள், ஆட்டோபிளாஷ் வசதி மற்றும் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டியுடன் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

ஆனால் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 221 இ-டாய்லெட்டுகள் மற்றும் 138 பொது கழிப்பறைகளில் தண்ணீர் பற்றாக்குறையும் மற்றும் போதிய பராமரிப்பு இல்லாததால் பெரும்பாலானவை செயல்படாமல் உள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே