திமுகவில் துப்பாக்கி கலாசாரம் தலைதூக்கியுள்ளது..! – அமைச்சர் ஜெயக்குமார்

திருப்போரூர் அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் திமுக எம்எல்ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் கைது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயகுமார், ‘நில அபகரிப்பு திமுக ஆட்சிக் காலத்தில் அதிகம் இருந்தது என்றும்; துப்பாக்கிக் கலாச்சாரமும் தற்போது திமுகவில் தலைதூக்கிவிட்டது என்றும்; சட்டத்தை யாரும் கையில் எடுக்க கூடாது என்றும் தெரிவித்தார்.

மேலும் ஆட்சியில் இல்லாதபோதே இப்படி அரங்கேறுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக சொத்து பிரச்சனை குறித்த தகராறு ஒன்றில் திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மன் துப்பாக்கி சூடு நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கின் அடிப்படையில் சென்னை போலீசாருடன் இணைந்து செங்கல்பட்டு மாவட்ட போலீசார்
திமுக எம்.எல்.ஏவை தேடி வந்த நிலையில் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வைத்து, தனிப்படை போலீசாரால் திமுக எம்எல்ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்டார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே