பாஜகவில் இணையும் எம்எல்ஏ., கு.க.செல்வம்… அவரச ஆலோசனையில் திமுக..!!

எம்எல்ஏ., கு.க.செல்வம் பாஜகவில் சேர உள்ள நிலையில் மூத்த நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

கு.க.செல்வம் டெல்லியில் இன்று மாலை பாஜக தலைவர் நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருக்கும் இவர், 1997ல் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தார் என்பது குறிபிடத்தக்கது.

கு.க.செல்வம் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். சென்னை, வடபழனியில் உள்ள அறிஞர் அண்ணா பொதுநல மன்றத்தின் செயலாளராக 2009ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாஜகவில் இவர் இணைவது குறித்து திமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், திமுக தலைவர் தலைமையில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே