மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் உடனடியாக நிவாரண தொகையை அறிவிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள், தொடர்ச்சியாக பெய்த மார்கழி மழையில் அடியோடு மூழ்கி பொங்கல் விழா நேரத்தில் விவசாயிகள் அனைவருக்கும் பெருந்துயரத்திற்கும், பேரிழப்பிற்கும உள்ளாகியிருப்பது கவலையளிக்கிறது.

நிவர் புயலில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீள முடியாமல் தவித்து கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு, இந்த மழை பேரடியாக வந்துள்ளது.

இதனை அதிமுக அரசு உரிய முறையில் அணுகுவதாக தெரியவில்லை. நிவாரணம் வழங்குவதில் அதிமுக அரசு கோட்டை விட்டு தூங்குகிறதுநிவர் புயல் பாதிப்புக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணமும் இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை என விவசாயிகள் குமுறுகின்றனர்.

பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையும் பெரும்பாலான விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை.

வேளாண் நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீரையும், அதில் மூழ்கியுள்ளல அறுவடை செய்ய முடியாத நெற் பயிர்களை பார்த்து விவசாயிகள் கண்கலங்கியுள்ளதை அதிமுக அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது கண்டனத்திற்குரியது.

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளும், பொது மக்களுக்கும் உடனடியாக நிவாரண தொகையை அறிவிக்க வேண்டும்.

ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்குவதை உறுதி செய்து, பயிர்க்காப்பீட்டு தொகையையும் எவ்வித தாமதமின்றி கிடைப்பதற்கு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே