ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய போவதாக தகவல்..!!

ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவியை எதிர்பார்த்திருந்தாகவும், மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காததால் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கு.க.செல்வம் டெல்லியில் இன்று மாலை பாஜக தலைவர் நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருக்கும் இவர், 1997ல் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தார் என்பது குறிபிடத்தக்கது.

கு.க.செல்வம் 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

சென்னை, வடபழனியில் உள்ள அறிஞர் அண்ணா பொதுநல மன்றத்தின் செயலாளராக 2009ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் பாஜகவில் இணைவது குறித்த கேள்விக்கு திமுக வட்டாரங்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றன.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே