சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை மு.க.ஸ்டாலின் ஜனவரி 5-ம் தேதி தொடங்குகிறார்..!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில்,சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையை ஜனவரி மாதம் தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. தொடர்ச்சியாக இரண்டு முறை அதிமுக ஆட்சி இருந்து வருகிறது.குறிப்பாக தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக அதன் முக்கிய தலைவர்களான ஜெயலலிதா ,கருணாநிதி இல்லாமல் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்கின்றன.

இதனால், சட்டசபை தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராக தொடங்கி உள்ளது.

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும், கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.

ஆகவே சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து 100 நாள் பிரச்சாரத்தை இன்று திருக்குவளையில் இருந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கவுள்ளார்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் ஜனவரி 5ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே