ஜெ. அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திமுக 3 நாள் துக்கம் அனுசரிப்பு என திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

ஜெ.அன்பழகன் மறைவையொட்டி திமுக சார்பில் 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படுவதாகவும், 3 நாட்களுக்கு திமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெ அன்பழகன் மறைவு குறித்து முக ஸ்டாலின் மேலும் கூறியபோது, ‘ஜெ.அன்பழகன் மறைந்துவிட்டார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது என்றும், அன்பழகனின் மறைவுச் செய்தி இதயத்தில் இடியும், மின்னலும் ஒருசேர இறங்கியது போல் இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

ஜெ.அன்பழகனின் மறைவு ஈடுகட்ட முடியாத பேரிழப்பு என கனிமொழி எம்பியும், ஜெ.அன்பழகனின் மறைவு திமுகவிற்கு பேரிழப்பு, ஜெ.அன்பழகனின் மறைவுச் செய்தி பேரிடியாக தாக்குகிறது என்றும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்குரியவர் என்றும், அன்பழகன் மறைந்தார் என்பதை தாங்க முடியவில்லை என்று வைகோவும், ஜெ.அன்பழகனின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது என்றும், அவரது குடும்பத்தினருக்கும், அவரைச் சார்ந்த இயக்கத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Tags :

J ANBALAGAN| DMK

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே