பெற்றோர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது ஜெ. அன்பழகன் உடல்

கொரோனா வைரஸால் இந்தியாவிலேயே முதல்முதலில் பலியான எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் அவர்களின் மறைவு திமுகவை மட்டுமின்றி தமிழக அரசியல் தலைவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சி தலைவர்களும் ஜெ.அன்பழகன் மறைவிற்கு தங்கள் இரங்கலை செலுத்தினார்கள்

இந்த நிலையில் சென்னை கண்ணம்மாபேட்டையில் ஜெ. அன்பழகன் உடல் சற்றுமுன் அடக்கம் செய்யப்பட்டது. கொரோனாவால் மறைந்தவர் என்பதால் நெருங்கிய உறவினர் தவிர இறுதிச்சடங்கில் வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. கொரோனா தடுப்பு கவச உடை அணிந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் அன்பழகன் உடலை அடக்கம் செய்தனர்

சென்னை கண்ணம்மாப்பேட்டையில் பெற்றோர் நினைவிடம் அருகே ஜெ.அன்பழகன் அவர்களின் நல்லடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சுகாதாரத்துறையினர்களின் அறிவுறுத்தல் காரணமாக திமுக பிரமுகர்கள் உள்பட யாரும் இந்த இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Related Tags :

J anbazhagan| DMK

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே