தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1372- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று ஒரு நாளில் மட்டும் 5,363 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,372 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை.

இன்று ஒரேநாளில் மட்டும் 82 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன்மூலம், மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 365 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ஏற்படும் இறப்பு விகிதம் 1.1 சதவீதமாகத் தொடர்கிறது.

இதுதவிர தமிழகத்தில் மேலும் 3 ஆய்வகங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. 

இதன்மூலம், தமிழகத்தில் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளும் ஆய்வகங்கள் 31 ஆக அதிகரித்துள்ளன.

இன்றைக்குப் புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டதில் அதிகபட்சமாக திருப்பூரில் 28 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே