அமமுகவில் இருந்து பிரிந்த சுமார் 5 ஆயிரம் பேர் அறந்தாங்கி அதிமுக எம்எல்ஏ சகோதரர் பரணிகார்த்தி தலைமையில் திமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின், 2016 ம் ஆண்டு தேர்தலில் ராதாபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கையின் போது கலவரத்தை ஏற்படுத்தி அதிமுக வெற்றிப்பெற்றதாக முறைகேடாக அறிவித்தனர் என்றார்.
கிட்டத்தட்ட 15 இடங்களில் நியாயமாக வாக்கு எண்ணிக்கை நடந்திருந்தால் திமுக தான் ஆட்சியில் இருந்திருக்கும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
ராதாபுரம் தொகுதிக்கான மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வேட்பாளர் அப்பாவு தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் அதனை தற்போது வெளியிட்டால் நீதிமன்ற அவமதிப்பாகிவிடும் என்றும் ஸ்டாலின் கூறினார்.
அதே சமயம் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திமுக ராதாபுரத்தில் வென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதிமுகவினர் அமைதியாக இருப்பதை பார்த்தாலே முடிவு மக்களுக்கு தெரிந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இயக்குனர் மணிரத்னம் நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீதான தேச துரோக வழக்கை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதே போல் காலில் விழுவது மோசமான கலாச்சாரம் என்றும் தனது காலில் யாரும விழக்கூடாது என்றும் அவர் கூறினார்.
ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கையால் இன்பதுரை துன்பதுரை ஆகிவிட்டார் என்றும், அந்த தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளதாக வரும் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாகும் என்றும் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.