தேனி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் பணிகளில் உள்ள இடர்பாடுகளை விரைவாக நீக்கும்படி நிர்வாக இயக்குனருக்கு மத்திய அமைச்சரவை அறிவுறுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக காணொலிக் காட்சி மூலமாக மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ், தமிழக மற்றும் கேரள மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதில் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், கேரள மாநில தலைமைச் செயலாளர், தேனி நியூட்ரினோ ஆய்வக இயக்குனர் விவேக்பாதர் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.
தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுவதால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து இரு மாநிலங்களும் கேள்விகள் எழுப்பின.
இதை தொடர்ந்து, நியூட்ரினோ ஆய்வகம் திட்டம் தொடர்பான முழுமையான சட்ட பணிகள் மற்றும் ஆய்வுகள் குறித்த விபரங்களை இரு மாநிலங்களுக்கும் வழங்க நியூட்ரினோ ஆய்வக நிர்வாக இயக்குனர் விவேக்பாதர் அறிவுறுத்தப்பட்டார்.