ஜார்க்கண்ட் புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்!

ஜார்க்கண்ட் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள ஹேமந்த் சோரனின் பதவியேற்பு விழாவுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார். 

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றது.

இதையடுத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவரான ஹேமந்த் சோரன் இன்று முதலமைச்சராக பொறுப்பேற்கிறார். 

இதற்கான பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையடுத்து சென்னையில் இருந்து விமானம் மூலம் மு.க ஸ்டாலின் ராஞ்சி புறப்பட்டுச் சென்றார். அவருடன் திமுக எம்.பி டி.ஆர் பாலுவும் சென்றுள்ளார். 

ஹேமந்த் சோரனின் பதவியேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே