மது அருந்திய வீடியோ வெளியானதால் மாணவி தற்கொலை முயற்சி..!

மயிலாடுதுறையில் இளைஞருடன் சேர்ந்து மது அருந்திய வீடியோ வெளியானதால் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறையில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவிகள் 4 பேர், கல்லூரி  சீருடையில் இளைஞர் ஒருவருடன் சேர்ந்து மது அருந்தும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சைக்குள்ளானது.

இதனையடுத்து அம்மாணவிகள் பயின்று வந்த கல்லூரி நிர்வாகம், வீடியோவில் இருந்த 4 மாணவிகளையும் கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கி உத்தரவிட்டது.

இதனால் வேதனையடைந்த மாணவிகளில் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனடியாக அவரை மீட்ட பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே