திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

தஞ்சை அருகே திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இதற்கும் பேஸ்புக்கில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் வெளியிடப்பட்டதற்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளார்.

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், கல்வி உபகரணங்கள், பள்ளிக்கு நாற்காலிகள், மேசைகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தொடர்ந்து பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி சம்மந்தப்படவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே