நீட் முறைகேடு வழக்கில் திருப்பத்தூர் மாணவனின் தந்தை ஜாமீன் மனுவை தள்ளுபடி

நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் திருப்பத்தூர் மருத்துவ மாணவனின் தந்தை ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

திருப்பத்தூரைச் சேர்ந்த மருத்துவ மாணவனின் தந்தை, தனக்கு ஜாமின் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

தான் எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை எனவும், விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் சாட்சிகளை கலைக்கவோ, மிரட்டவோ மாட்டேன் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவானது, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது மாணவரின் தந்தை விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை எனவும், நீட் தேர்வு நடந்தபோது அவரது மகன் மொரீசியசில் இருந்ததால் நீட் தேர்வில் முறைகேடு செய்தது உண்மையே என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே