வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் – டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு..!!

வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் நீடிப்பதாக திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு குற்றஞ்சாட்டியுள்ளார். 

சென்னை கோயம்பேட்டில் ஆணையர் பழனிசாமியை, நேரில் சந்தித்து புகார் அளித்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

திமுக சார்பாக தேர்தல் ஆணையரிடம் பல முறை புகாரளித்த பின்னரும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடாமல் தொடர்ந்து காலதாமதம் செய்வதாக குற்றஞ்சாட்டினார்.

தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படக்கூடாது என்று கூறிய டி.ஆர்.பாலு, திமுக தொண்டர்கள் விழிப்புணர்வுடன் இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். 

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை விட 10 மடங்கு அதிகமாக ஸ்டாலின் கட்சியை திறம்பட வழிநடத்துவதாக பெருமிதம் தெரிவித்த அவர் அனைத்து தேர்தலிலும் திமுகவே வெற்றி பெறும் என்றும் டி.ஆர்.பாலு நம்பிக்கை தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே