கோவை மாவட்டத்தில் அதிமுக வெற்றி..!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோவையில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 27 மற்றும் 30-ம் தேதிகளில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில் வாக்கு எண்ணிக்கை நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது.

தற்போது, கோவை மாவட்டத்தில் உள்ள ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிகளை அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கைப்பற்றிய விபரங்களை காணலாம்.

கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களில் சுல்தான்பேட்டை, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, மதுக்கரை, பெரிய நாயக்கன் பாளையம், ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு, காரமடை, சர்க்கார் சாமகுளம், அன்னூர், சூலூர் ஆகிய 11 இடங்களில் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தலைவர் பதவியை பிடிக்கிறது.

மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் மொத்தமுள்ள 17 இடங்களில், 13 இடங்களில் அதிமுகவும், 3 இடங்களில் திமுகவும், ஒரு இடத்தில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே