புரோட்டா போட்டு வாக்கு சேகரித்த அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உணவகம் ஒன்றில் பரோட்டா சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் களைகட்ட தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் அனைத்து பகுதிகளிலும் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விராலிமலையில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ஆர்.கே சிவசாமி என்பவரை ஆதரித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அங்குள்ள ஒரு உணவகத்தில் புரோட்டா போட்டுக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த அமைச்சர் விஜயபாஸ்கர் புரோட்டா மாஸ்டரிடமிருந்து கரண்டியை வாங்கி தானே புரோட்டா போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே