2021 சட்டமன்றத் தேர்தலில் பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

இதன் மூலம் அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 23 தொகுதிகளிலும் மாம்பழம் சின்னத்தில் அக்கட்சி போட்டியிடவுள்ளது.

பாமக கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் மாம்பழம் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன் மூலம் புதுச்சேரியைத் தொடர்ந்து தமிழகத்திலும் மாம்பழம் சின்னத்தில் பாமக போட்டியிடுகிறது.

தமிழகத்தில் 2001-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தோதலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றிருந்தது. அந்தக் கட்சிக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

அதிலும் மாம்பழம் சின்னத்திலேயே பாமக போட்டியிட்டது.

இதனிடையே தற்போதைய சட்டப் பேரவை தேர்தலிலும் அதிமுக உடனான கூட்டணியில் மாம்பழம் சின்னத்திலேயே பாமக போட்டியிடவுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே