இராமநாதபுரத்தில் இளையராஜாவுக்கு 5 அடி உயர கேக் சிலை..!!

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரி இராமநாதபுரத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் 5 அடி உயரத்தில் கேக்கால் செய்யப்பட்ட இளையராஜா சிலை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரத்தில் உள்ள தனியார் இனிப்பகம் ஒன்றில் இசையமைப்பாளர் இளையராஜாவின் 5 அடி உயர கேக்கால் ஆன உருவம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சுமார் 50 கிலோ எடையில் ஜிப்பா, வேட்டி அணிந்து இருப்பது போல இளையராஜாவின் உருவம் வடிவமைக்கப்பட்டு கண்ணாடி கூண்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

50 கிலோ சர்க்கரை மற்றும் 250 முட்டைகளை கொண்டு ஐந்து அடி உயர கேக்கினால் ஆன சிலையை ஐந்து கலைஞர்கள் 5 நாட்களில் உருவாக்கியதாக கடை உரிமையாளர் சுப்பு சதீஷ் தெரிவித்தார்.

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும், இசையில் சாதனை புரிந்த இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த கேக் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

கேக்கினால் செய்யப்பட்ட இளையராஜாவின் உருவத்தை ஆர்வத்துடன் கண்டு ரசிக்கும் வாடிக்கையாளர்கள் அதன் முன் செல்பி எடுத்தும் செல்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே