10 கோடி ரூபாய் செலவில் செட் அமைத்து நடனம் : அசத்தும் லெஜண்ட் சரவணா

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் நடிக்கும் படத்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

லெஜண்ட் சரவணா வழங்கும், புரோடக்சன் நம்பர்-1 தயாரிப்பில் வெளியாக இருக்கும் படத்தின் பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

இதில் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களுடன் லெஜண்ட் சரவணா, கீத்திகா திவாரி பங்கேற்று நடித்தனர்.

10 கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக அரண்மனைப்போல் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடந்தது.

இதில் ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடனத்தை பார்த்து வியந்து அத்தனை நடன கலைஞர்களும் கை தட்டி பாராட்டியதாக சமூக வலைதளங்களில் திரையுலகினர் கூறியுள்ளனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே