நியுசிலாந்து நாடாளுமன்றத்தில் மலையாளத்தில் பேசிய இந்திய வம்சாவளி அமைச்சர்..!! (VIDEO)

நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கேரளத்தைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் தனது நாடாளுமன்ற உரையின் போது மலையாளத்தில் பேசினார்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த தம்பதியினர் பரவூர் ராமன் ராதாகிருஷ்ணன் மற்றும் உஷா ஆகியோரின் மகள் பிரியங்கா ராதாகிருஷ்ணன். இவர் நியூசிலாந்து நாட்டிற்கு தனது முதுகலை படிப்பை முடிப்பதற்காக சென்றார்.

அதனைத் தொடர்ந்து அங்கு குடியேறிய அவர் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள ஜெசிந்தா ஆர்டெர்னின் அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் அந்நாட்டு அமைச்சரவையில் பிரியங்கா மலையாளத்தில் பேசிய காணொலியை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது சுட்டுரையில் பகிர்ந்தார். 

வாழ்த்துகள் எனக் குறிப்பிடப்பட்ட அந்தக் காணொலி தற்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே