ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை.; நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு உயிருடன் மீட்பு..!! (VIDEO)

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரில் நவ்கான் அருகே டவுனி என்ற கிராமத்தில் திவ்யான்ஷி என்ற ஒரு வயது குழந்தை நேற்று தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.

அந்த நிலையில் எதிர்பாராத விதமாக 15 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் அந்த குழந்தை தவறி விழுந்துள்ளது.

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையின் குரலை தாயால் கேட்க முடிந்ததே தவிர அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்தனர். மேலும் தலைமைச் செயல் அதிகாரி தாசில்தார் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இந்த நிலையில் குவாலியரில் இருந்து பேரிடர் மீட்பு குழு வரவேற்கப்பட்டது. ஆழ் துளை கிணற்றில் இருந்து குழந்தை மீட்டெடுக்க மீட்பு குழுவினர் காவல்துறையினர் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் ஜேசிபி மூலம் 20 அடி பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் மீட்பு படையினர் குழந்தையை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு நள்ளிரவில் பத்திரமாக மீட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே