வேலையை இழந்த மலேசிய விமானி..; நூடுல்ஸ் கடை தொடங்கி பிரபலம்..!!

மலேசியாவில் கொரோனா அச்சுறுத்தலால் வேலை இழந்த விமானி ஒருவர், நூடுல்ஸ் கடை ஒன்றை தொடங்கி பிரபலமடைந்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகளால் மலிண்டோ ஏர் விமான நிறுவனம் தனது 2 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது.

4 குழந்தைகளுக்கு தந்தையான விமானி அஸ்ரின் மொஹமட் சவாவியும் (Azrin Mohamad Zawawi) இதில் வேலையிழந்த நிலையில், சற்றும் மனம் தளராமல் தலைநகர் கோலாலம்பூரில் சிறிய நூடுல்ஸ் கடை ஒன்றை தொடங்கி உள்ளார்.

விமான கேப்டனின் வெள்ளை சீருடையுடன் பணிக்கு வரும் அஸ்ரின் இணையத்தில் வைரலான நிலையில், அவரின் நூடுல்ஸ் கடை சிறப்பு கவனம் பெற்றுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே