மீண்டும் உயிருடன் வருவேனா என்றிருந்த நிலையில் மறுபிறவி எடுத்து வந்துள்ளேன் என சட்டப்பேரவையில் அமைச்சர் காமராஜ் கண்ணீர் மல்க பேசினார்.
தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கடந்த சில வாரங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவருடைய உடல் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் ஏற்பட்டு மீண்டு வந்தார்.
95% அளவுக்கு நுரையீரல் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் மீண்டு வந்தது மருத்துவ வரலாற்றில் ஒரு அதிசயம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே அமைச்சர் காமராஜரின் உடல்நிலை குறித்து அவ்வப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கேட்டறிந்தனர்.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் காமராஜ், மீண்டும் உயிருடன் வருவேனா என்றிருந்த நிலையில் மறுபிறவி எடுத்து வந்துள்ளேன்.
முதல்வர், துணைமுதலவருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என கண்ணீர் மல்க பேசினார்.