வேட்பாளர்களை தேர்வு செய்யும் குழு அமைத்தது மக்கள் நீதி மய்யம்..!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் தேர்வு குழுவை கமலஹாசன் வெளியிட்டுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமலஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் நேர்காணல் நாளை மறுநாள் நடைபெறும்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 7-ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையத்தின் சார்பில் போட்டியிட ஏராளமான விருப்ப மனுக்கள் குவிந்துள்ளன.

தகுதிசால் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க தன்னுடைய தலைமையிலான வேட்பாளர் தேர்வு குழு வரும் மார்ச் 1-ம் தேதி முதல் வேட்பாளர் நேர்காணல் ஈடுபடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

அந்த வேட்பாளர் தேர்வு குழுவில் பொன்ராஜ், ரங்கராஜன், செந்தில் ஆறுமுகம், சுரேஷ் ஐயர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் தான் நேர்காணலை நடத்துகின்றனர் என அறிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே