மாநிலத்தில் எந்த ரேசன் கடைகளிலும் ரேசன் வாங்கும் திட்டம் குறித்து அமைச்சர் காமராஜ் விளக்கம்

எந்த நியாயவிலைக் கடைகளிலும் ரேசன் வாங்கும் திட்டம் பிப்ரவரி ஒன்றாம் தேதிக்கு பிறகு படிப்படியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் உணவு மற்றும் நுகர்பொருள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த உணவுத் அமைச்சர் காமராஜ், தமிழகத்தில் எந்த ரேசன் கடைகளிலும் ரேசன் வாங்கும் திட்டம், வரும் ஒன்றாம் தேதி முதல் நெல்லை, தூத்துக்குடியில் தொடங்குவதாக தெரிவித்தார்.

படிப்படியாக பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் பொருட்கள் வாங்குவதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இதற்காக கடைகளில் கூடுதல் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு வெளிப்படைத்தன்மையுடன் அரசு செயல்படும் எனவும், முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை எனவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே