படுகொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!

புதுக்கோட்டையில் படுகொலை செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆடு திருட்டை தடுக்கச் சென்ற திருச்சி மாவட்டம் நாவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க இரண்டு டிஎஸ்பிக்கள் தலைமையில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் 2 எஸ்.ஐக்கள் உள்ளடங்கிய 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன.

image


உயிரிழந்த சிறந்த உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே