திருமணத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மணமகன் கைது

சென்னையை அடுத்த திருவேற்காட்டில், பட்டாக் கத்தியால் கேக் வெட்டி திருமண விழா கொண்டாடியது தொடர்பாக மணமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில், பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவரான புவனேஷ் என்பவருக்கு கடந்த 26ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் கலந்துகொண்ட கல்லூரியின் முன்னாள் மற்றும் இன்னாள் மாணவர்கள் சிலர், நீண்ட பட்டாக்கத்திகளைக் கொண்டு கேக் வெட்டியும், அச்சுறுத்தும் விதமாக கத்திகளை காட்டி கூச்சலிட்டும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வீடியோ வைரல் ஆன நிலையில் விசாரணையை முடுக்கிவிட்ட போலீசார், கோயம்பேட்டில் உள்ள தனது மாமியார் வீட்டில் இருந்த புது மாப்பிள்ளை புவனேஷை கைது செய்தனர்.

இந்த கும்பலில் இருந்த மோகன்குமார் என்பவர் ரூட்டு தல விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே சிக்கியவர் என கூறப்படும் நிலையில் அது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்றுவருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே