அயனாவரம் பாலியல் வழக்கு – குற்றவாளிகள் 15 பேருக்கும் தண்டனை அறிவிப்பு

சென்னை அயனாவரத்தில் மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நிலையில், 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறையும்,

சென்னை அயனாவரத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த காது கேளாத மாற்றுத் திறனாளி சிறுமியின் குறையை தனக்குச் சாதகமாக்கிய அக்குடியிருப்பின் லிப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார், சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து குடியிருப்பில் பணிபுரிந்த பிளம்பர், காவலாளிகள் என 17 பேர் 7 மாதங்களாக சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலையில் இந்த விவகாரம் சிறுமியின் குடும்பத்தாருக்குத் தெரியவரவே, அவர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே, சிறையில் இருந்த பாபு என்ற நபர் இறந்துவிட்டார்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை தீர்ப்பளித்த போக்சோ சிறப்பு நீதிமன்றம், தோட்டக்காரர் குணசேகரனுக்கு எதிரான சாட்சிகள் இல்லாததால், அவரை விடுவித்தது.

எஞ்சிய 15 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிமன்றம், தண்டனை விவரங்களை இன்று அறிவித்தது.

முதல் குற்றவாளி ரவிக்குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றவாளிகளின் பெயர், வயது, தண்டனை விபரங்கள்:

1) ரவிகுமார்(56) இரட்டை ஆயுள்

2) சுரேஷ் (32) ஆயுள்

3) ராஜசேகர்(48) ஆயுள் மற்றும் 2 ஆண்டு சிறை

4) எரால்பிராஸ்(58) 7 ஆண்டு

5) அபிஷேக் ( 28) ஆயுள்

6) சுகுமாரன் (60) 5 ஆண்டு

7) முருகேசன்(54) 5 ஆண்டு

8) பரமசிவம் (60) 5 ஆண்டு

9) ஜெய்கணேஷ் (23) 5 ஆண்டு

10) பாபு(36) இறந்துவிட்டார்

11) பழனி(40) ஆயுள்

12) தீனதயாளன்(50) 5 ஆண்டு

13) ராஜா (32) 5 ஆண்டு

14) சூர்யா(23) 5 ஆண்டு

15) குணசேகரன்(55) விடுதலை

16) ஜெயராமன்(26) 5 ஆண்டு

17) உமாபதி(42) 5 ஆண்டு

இதில் ரவிக்குமார், சுரேஷ், அபிஷேக் மற்றும் பழனி ஆகியோர் சாகும் வரையில் சிறையில் இருக்க தீர்ப்பளிக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே