எம்ஜிஆரின் 104ஆவது பிறந்தநாள் – முதல்வர், துணை முதல்வர் மரியாதை..!!

எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாளையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் அவர்கள் இருவரும் அங்கு அ.தி.மு.க கொடியையும் ஏற்றி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள், மூத்தத் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் அவரவர் இல்லங்களில் எம்.ஜி.ஆரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் இருவரும் சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

அங்கு உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு இருவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் அவர்கள் இருவரும் அங்கு அ.தி.மு.க கொடியையும் ஏற்றி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள், மூத்தத் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், அதிமுக தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே