குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12ல் திறப்பு!

குறுவை நெல் சாகுப்படிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் குறுவை நெல் பாசனத்திற்கு மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது.

இதையடுத்து, இன்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிறகு, மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ம் தேதி காலை 10 மணிக்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையில் நீர்மட்டம் 100.01 அடியாகவும், அணையின் 64.85 டி.எம்.சி. நீர் இருப்பும் உள்ளது.

மேட்டுர் அணையில் இருந்து 50 நாட்கள் தண்ணீர் திறப்பதற்கு போதுமான அளவு நீர் இருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை திறக்கப்பட்டால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் 3.25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

இதன்மூலம் குறுவை செல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு சுமார் 5.60 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் எதிர்ப்பார்க்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்தாண்டு 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய தமிழக அரசு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே