Amphan புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வங்க கடலில் உருவாகியுள்ள “Amphan புயல்” ஒரே இரவில் அதி தீவிர புயலாக மாறிய மாறியுள்ளது.

அடுத்த 12 மணி நேரத்தில் “கடுமையான புயலாக” தீவிரமடைய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இன்று மாலை 4 மணி அளவில் உயர்மட்ட அளவில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆம்பன் புயல் வங்கதேச கடற்கரை பகுதியில் புதன்கிழமையன்று கரையைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீவிர புயலான ஆம்பன், வங்ககடலின் தென்கிழக்குப் பகுதியிலிருந்து, வடக்கிழக்காக கடந்த 6 மணிநேரத்தில் 13 கி.மீ வேகத்தில் சென்று வருகிறது.

இது மேலும் தீவிரமடைந்து, அதி தீவிரப்புயலாக உருவெடுத்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் புயல் சேதத்தை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே