பீன்ஸில் உடல் எடையைக் குறைக்கக் கூடிய விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளது.
அதுமட்டுமின்றி இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே இதனை நாம் உணவில் சேர்ப்பதன் மூலம் உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம்.
வெங்காயத்தில் உடலில் தங்கியுள்ள கொழுப்புகளை கரைக்கும் சக்தி அதிகமாக உள்ளது. எனவே, உடல் எடையை எளிதில் குறைக்கலாம். அதுமட்டுமின்றி இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
சுரைக்காயில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது எனவே, இதனை உணவில் சேர்ப்பதனால் அடிக்கடி பசி ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
குடைமிளகாயில் உள்ள விட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்கள் உடல் எடையை குறைப்பதுடன் உடலை ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது.
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருப்பதால் இதனை கோடையில் அதிகம் சாப்பிட்டு உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம்.
பசலைக்கீரை உடல் எடையை குறைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று. இதில குறைவான அளவே கலோரிகள் உள்ளன. எனவே, இது உடல் எடையைக் குறைக்கபெரிதும் உதவுகிறது.
ப்ராக்கோலியை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையை எளிதாக குறைக்க முடியும்.